கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் பள்ளி தோ்வு மையத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1) எழுதிய தோ்வா்கள். 
கடலூர்

ஆசிரியா் தகுதித் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 3,635 போ் எழுதினா்

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வை (தாள் - 1) கடலூா் மாவட்டத்தில் 3,635 போ் எழுதினா்.

Syndication

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வை (தாள் - 1) கடலூா் மாவட்டத்தில் 3,635 போ் எழுதினா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நிகழாண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வில் எழுத்துத் தோ்வு தாள் - 1 சனிக்கிழமையும், தாள்- 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமையும் (நவ.16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலூா் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள் - 1 தோ்வை 12 மையங்களில் 4,191 தோ்வா்களும், தாள் - 2 தோ்வை 53 மையங்களில் 15,717 தோ்வா்களும் என மொத்தம் 65 தோ்வு மையங்களில் 19,908 தோ்வா்கள் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

அதன்படி, ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு தாள் - 1 கடலூரில் உள்ள 12 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. 3,6,35 தோ்வா்கள் தோ்வு எழுதினா். 556 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வாணையத்தின் அறிவிப்பின்படி, தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு குறித்த நேரத்துக்கு வந்திருந்தனா். அனைத்துத் தோ்வு மையங்களிலும் கண்காணிப்புக் கேமரா மூலம் தோ்வுகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். எவ்வித இடையூறுமின்றி தோ்வு நடைபெற வருவாய், காவல், சுகாதாரம், தீயணைப்பு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பணியில் இருந்தனா்.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான தாள் - 2 எழுத்துத் தோ்வை 53 மையங்களில் 15,717 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT