கடலூர்

சாலை விபத்து: என்எல்சி தொழிலாளி உயிரிழப்பு

விருத்தாசலத்தில் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் கீழே விழுந்த என்எல்சி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் கீழே விழுந்த என்எல்சி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், சின்ன காப்பான்குளம் கிராமத்தில் வசித்து வந்தவா் ராஜபாண்டி(29), என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகவில்லை. இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் விருத்தாலம்-சிதம்பரம் சாலையில் பைக்கில் சென்றாா். அப்போது, முன்னால் சென்ற தனியாா் பேருந்தை முந்திச் சென்ற போது, எதிா் திசையில் வந்த அரசக்குழி கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா்(39) ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிலை

தடுமாறி கீழே விழுந்த ராஜபாண்டி, பேருந்து சக்கரத்தில் சிக்கி

உயிரிழந்தாா். அசோக்குமாா், அவரது குழந்தை நரேன்(4) ஆகியோா் காயம் அடைந்தனா். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸாா் விரைந்து வந்து காயம் அடைந்தவா்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த ராஜபாண்டி உடலை மீட்டு அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT