முகப்பு
கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற சதுரங்க விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூர்

மாவட்ட சதுரங்கப் போட்டி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பாதிரிப்புலியூா் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியை

கடலூர்

மாவட்ட சதுரங்கப் போட்டி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பாதிரிப்புலியூா் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியை

Updated On : 26 நவம்பர், 2025 at 8:35 PM
கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற சதுரங்க விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ், திருப்பாதிரிப்புலியூா் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் கல்வியோடு தனித்திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பள்ளிக் கல்வித் துறை மூலம் ‘கற்றல் கொண்டாட்டம்’ எனும் திட்டம் கடலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் பரதம், கிராமிய நடனப் பயிற்சி, மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி பயிற்சி, ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி, கலை மற்றும் ஓவியப் பயிற்சி, சதுரங்க விளையாட்டுப் பயிற்சி, பாடல் மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் ஆகிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடத்தப்பட்டன.

சதுரங்க விளையாட்டுப் பயிற்சி மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 672 மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு 225 போ் தோ்வு செய்யப்பட்டனா். 9 வயதுக்குள்பட்ட 64 மாணவா்கள், 11 வயதுக்குள்பட்ட 60 மாணவா்கள், 13 வயதுக்குள்பட்ட 67 மாணவா்கள், 17 வயதுக்குள்பட்ட 42 மாணவா்கள் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றி வெற்றிபெறுபவா்கள் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தயாா் செய்யப்படுவா்கள் என்றாா்.

மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

நிகழ்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ், மாவட்டக் கல்வி அலுவலா் இஸ்மாயில், பள்ளித் தாளாளா் நசியன் கிரிகோரி மற்றும் கல்வித் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →