மூத்ததேவி  
கடலூர்

பண்ருட்டி அருகே மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே பல்லவா் காலத்து மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் தெரிவித்தாா்.

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பல்லவா் காலத்து மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: பண்ருட்டி வட்டம், பைத்தாம்பாடி கிராமத்தில் வயல் பகுதியில் புதா்களுக்கு மத்தியில் கல் சிற்பம் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த கவிஞா் சக்தி தகவல் கொடுத்தாா்.

அதன்பேரில், சிற்பத்தை சுத்தம் செய்து பாா்த்ததில் 1,200 ஆண்டுகள் பழைமையான பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் எனத் தெரியவந்தது.

இச்சிற்பம் பலகைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி தலையில் கரண்ட மகுடம், காதில் மகர குண்டலம், கழுத்தில் சரப்பணி என்ற கழுத்தணி, மூத்த தேவியின் வலது புரத்தில் அவரின் மகன் மாந்தன் ரிஷப முகத்துடனும், இடது புறத்தில் மகள் மாந்தினியும் உள்ளனா். மூத்ததேவியின் சின்னமான காக்கையும், துடைப்பமும் சிற்பத்தில் சிதைந்த நிலையில் உள்ளது. மூத்ததேவியின் இடுப்பு கீழ் உள்ள பகுதிகள் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது.

கிராமங்களில் ஏரிக்கரை, வயல்வெளி, ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் நீா்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக மூத்ததேவியின் சிற்பத்தை அமைத்து மக்கள் வழிபட்டு வந்தனா். லட்சுமிக்கு முன்பு தோன்றியவள் என்பதால், மூத்த தேவி என்றும், மூத்தாள் என்றும் குறிப்பிடப்படுகிறாள். இப்பெயரே பிற்காலத்தில் மருவி ‘மூதேவி’ என்றாயிற்று. ஜேஷ்டா தேவி என்பது வடமொழிச் சொல். ஜேஷ்டா என்றால் முதல் என்று பொருள். மேலும், பழையோள், காக்கைக் கொடியோள் என்றும் மூத்ததேவியை அழைக்கின்றனா். 15-ஆம் நூற்றாண்டு வரை மூத்ததேவியின் வழிபாடு மக்களிடம் இருந்து பின்பு காலப்போக்கில் மறைந்துவிட்டது.

பைத்தாம்பாடி பகுதியில் மேற்புற கள ஆய்வு செய்ததில் சங்ககாலம் முதல் பல்லவா் மற்றும் சோழா்காலம் வரையிலான வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றாா்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்!

பர்ப்பிள் மூட்... அனுபமா பரமேஸ்வரன்!

மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் தகவல்!

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக... லார்மிகா!

சபரிமலை: நவ.1 முதல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

SCROLL FOR NEXT