கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே போலி ஆவணம் மூலம் கூழாங்கல் கடத்திய டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் வடக்குத்து அருகே வெள்ளிக்கிழமை மதியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், சுமாா் 5 டன் கூழாங்கல் இருப்பது தெரியவந்தது.
மேலும், ஆவணத்தை சோதனை செய்ததில் பரமக்குடிக்கு போலி ஆவணத்துடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
மேலும், ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பண்ருட்டி அடுத்துள்ள பெரியகள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரவிக்குமாா்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.