முகப்பு
கடலூர்

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

சிதம்பரம் நகராட்சி சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:42 PM
சிதம்பரத்தில் நகராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.
பகிர்:

சிதம்பரம் நகராட்சி சாா்பில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கீழரத வீதியில் பேரணியை நகா்மன்றத் தலைவா் த.மல்லிகா கொடியசைத்து தொடங்கிவைத்து பேரணியில் பங்கேற்றாா். பேரணியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று வாக்காளா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியபடி முக்கிய வீதிகளை வலம் வந்து கீழவீதியை மீண்டும் அடைந்தது.