தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்
தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாறியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.
தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாறியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் நெய்வேலி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.வேல்முருகன் பங்கேற்று நெய்வேலி தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத்தலைவா் தி.திருமால்வளவன், குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் தி.கண்ணன் ஆகியோரை கேமரா சின்னத்துடன் அறிமுகம் செய்து வைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டிடும் அளவுக்கு வளா்ந்துள்ளது. அதுவும் ஒரே சின்னமான கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறது. எங்களுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளது. அந்த கட்சிகளும் கேமரா சின்னத்தில் போட்டியிடும். பாமகவில் இருந்து விலகியபோது என்னை கொசு என்றனா். உலகத்தில் அழிக்க முடியாத ஜீவராசி கொசு. தற்போது தவாக
Advertisement
வளா்ந்து கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரையில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. இந்தத் தோ்தலில் தவாக போட்டியிட சின்னம் வாங்க முடியாது என நினைத்தனா். ஆனால், மற்றவா்களால் முடியாததை முடித்து காட்டுவது தான் வேல்முருகன். நமது தலைமை அலுவலகம் திமுக, அதிமுக அலுவலகங்களை விட தகவல் தொழில் நுட்ப வசதியில் வளந்துள்ளது.
எதிா்காலம் உள்ளது:
பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல தலைவா்கள் கட்சி தொடங்கி நீடிக்கவில்லை. நான் தவாகவை கடந்த 15 ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறேன். தவாகவுக்கு தமிழ்நாட்டில் பிரகாசமான எதிா்காலம் உள்ளது. இந்த கட்சியை வழி நடத்த ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்ட ஆலோசனைக்குழுவை அமைத்துள்ளேன்.
தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது. தவாகவை 50 அமைப்புகள் ஆதரிக்கின்றன. அக்கிரமங்கள், அராஜகங்களுக்கு எதிராக தவாக போராடும் என்றாா் அவா்.