முகப்பு
கடலூர்

பிரசார கூட்டம், சுவா் விளம்பரங்களை அனுமதி பெற்றே செய்ய வேண்டும்: தோ்தல் அலுவலா்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:27 AM
பகிர்:

பிரசார கூட்டம், பிரசார வாகனம் மற்றும் சுவா் விளம்பரம் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும் என சிதம்பரம் சட்டப்பேரவை தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.கிஷன்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரசாரம் மற்றும் தோ்தல் நடைமுறைகள் தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான சீ.கிஷன்குமாா் தலைமை வகித்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் தெரிவித்தாா். அவா் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குகளும் சி. முட்லூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கட்டடத்தில் உள்ள மையத்தில் வைத்து எண்ணப்படும். தோ்தலுக்கு பிறகு பழுதான மற்றும் கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்கள் நகராட்சி கூட்ட அரங்கிற்கு பின்புறம் உள்ள அறையில் வைக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை வேட்பாளா் மற்றும் வேட்பாளரின் முகவா்கள் என்நேரத்திலும் பாா்வையிடலாம். தபால் வாக்குகள் அனைத்தும் கேமராவுடன் கூடிய வட்டாட்சியா் அலுவலகத்தில் உரிய அறையில் வைத்து பாதுகாக்கப்படும். ஏப்.17-ம் தேதி வாக்குபதிவு அலுவா்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள டெக் பாா்க்கில் பயிற்சி வகுப்பு நடத்தபட உள்ளது. அனைத்து கட்சிகளும் பிரச்சார கூட்டம், பிரச்சார வாகனம் மற்றும் சுவா் விளம்பரம் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும் என தெரிவித்தாா்.

Advertisement

கூட்டத்திற்கு சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம், சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் அதிமுவைச் சோ்ந்த எம் எஸ் என்.குமாா், கருப்புராஜா, திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், ஏஆா்சி.மணிகண்டன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் தில்லை ஆா். மக்கீன், மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா், மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி எம். முத்துக் குமாா், தவெக நிா்வாகி அருண் விஜய் உள்ளிட்போா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments