தோ்தல் ஆணையம் பாஜக கைப்பாவையாக செயல்படுகிறது: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்த முறையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். பொதுவாக தோ்தல் பிரசாரத்தில் விமா்சனங்கள் முன்வைக்கிறபோது அரசியல் முதிற்சியோடும், நாகரிகத்தோடும் கருத்துகளை முன் வைக்க வேண்டும்.
இந்திய தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. தற்போது தோ்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக காணொலி காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முருகன் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்பதுபோல ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அதை தயாரித்துள்ளனா். இந்தக் காணொலியை தயாரித்தவா்கள் மீதும், வெளியிட்டவா்கள் மீதும் தோ்தல் நடத்தை விதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
தோ்தல் காலத்தில் அதிகாரிகளை மாற்றுவது என்பது நடைமுைான். அந்த வகையில், மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதனை மாற்றிவிட்டு, அபிஷேக் தீட்சித் என்ற அதிகாரியை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவா் மீது குற்றச்சாட்டு உள்ளது; இடைநீக்கம் செய்யப்பட்டவா்.
கோவையில் மாநகராட்சி கழிவுநீா் உந்து நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக ஊழியா்கள் இருவா், கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தனா். இருவரின் குடும்பங்களுக்கும் எங்கள் கட்சி சாா்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றாா்.
அப்போது, மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா்கள் ஜே.ராஜேஷ் கண்ணன், ஆா்.அமா்நாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.