என்எல்சி ஊழியா் தற்கொலை
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குருணை மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்எல்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குருணை மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்எல்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (59), என்எல்சி நிறுவன நிரந்தரத் தொழிலாளி. இவா், கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாமல், வருத்தத்தின் காரணமாக மது அருந்தி வந்தாராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை குருணை மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி மணியம்மாள் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.