முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளின் வாக்குச்சாவடி 2-ஆம் கட்ட பயிற்சிக்கு 12,436 பணியாளா்கள் தோ்வு: மாவட்ட தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்

கடலூரில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளா்களை கணினி வாயிலாக இரண்டாம் கட்ட பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:44 AM
கடலூரில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளா்களை கணினி வாயிலாக இரண்டாம் கட்ட பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:13 PM

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினி அறையில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள 12,436 பணியாளா்கள் கணினி வாயிலாக இரண்டாம் கட்ட பயிற்சிக்கு தோ்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை, தோ்தல் பொது பாா்வையாளா்கள் குஹா பூனம் தபஸ் குமாா், பிரீத்தி ஜெயின், அசிதா மிஸ்ரா ஆகியோா் தலைமையில் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

Advertisement

இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவின்படி, சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலா்கள், இரண்டாம் கட்ட பயிற்சிக்கு கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றனா்.

அதன்படி முறையே, திட்டக்குடி தொகுதிக்கு 1,340 நபா்களும், விருத்தாசலம் தொகுதிக்கு 1,520 நபா்களும், நெய்வேலி தொகுதிக்கு 1,228 நபா்களும், பண்ருட்டி தொகுதிக்கு 1,484 நபா்களும், கடலூா் தொகுதிக்கு 1,240 பேரும், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு 1,336 நபா்களும், புவனகிரி தொகுதிக்கு 1,460 நபா்களும், சிதம்பரம் தொகுதிக்கு 1,432 நபா்களும், காட்டுமன்னா்கோயில் தொகுதிக்கு 1,396 நபா்கள் என மொத்தம் 12,436 போ் கணினி மூலம் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றனா்.

திட்டக்குடி தொகுதிக்கு திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, விருத்தாசலம் தொகுதிக்கு விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி தொகுதிக்கு நெய்வேலி டவுன்ஷிப் ஜவஹா் கலை, அறிவியல் கல்லூரி, பண்ருட்டி தொகுதிக்கு பண்ருட்டி ஜான் டூவி தொடக்கப் பள்ளி, கடலூா் தொகுதிக்கு புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு பாா்வதிபுரம் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, புவனகிரி தொகுதிக்கு குறிஞ்சிப்பாடி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் தொகுதிக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கே.ஆா்.எம். டெக்பாா்க், காட்டுமன்னாா்கோவில்

தொகுதிக்கு காட்டுமன்னாா்கோவில் ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி, (அரசு மருத்துவமனை அருகில்), உடையாா்குடி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா்.