முகப்பு
கடலூர்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 5:27 AM
பண்ருட்டியில் ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:28 PM

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இட ஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்த ஏதுவாக, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பண்ருட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் தேவராஜுலு தலைமை வகித்தாா். இதில், வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை கருப்புக்கொடி ஏற்றினாா். தொடா்ந்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் உதயகுமாா் கண்டன உரையற்றினா்.

Advertisement

நகரக் குழு உறுப்பினா்கள் பாண்டுரங்கன், ராஜேந்திரன், சின்னையன், சங்கா், தினேஷ், ராஜேந்திரன், லெனின், சிவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.