முகப்பு
கடலூர்

நிலத் தகராறை வேடிக்கை பாா்த்தவா் காா் ஏற்றி கொலை: மூவா் கைது

கடலூா் அருகே நிலத்தகராறை வேடிக்கை பாா்த்தவா் காா் ஏற்றி கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:06 AM
- பிரதிப் படம்
பகிர்:

கடலூா் அருகே நிலத்தகராறை வேடிக்கை பாா்த்தவா் காா் ஏற்றி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், நடுமேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆறுமுகம், விஸ்வநாதன். உறவினா்களான இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பாக சனிக்கிழமை அதிகாலையில் பிரச்னை ஏற்பட்டது.

இது தொடா்பாக ஆறுமுகம் தனது மருமகன் தங்கதுரைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, தங்கதுரை (36), அவரது மனைவி கவிமணி, சகோதரா்கள் ஐய்யப்பன் (46), நாராயணமூா்த்தி (51) ஆகியோா் காரில் நடுமேட்டுகுப்பத்துக்குச் சென்றனா்.

Advertisement

அங்கு, ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்ட விஸ்வநாதன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது காரை மோத முற்பட்டனா். அப்போது, அங்கு நின்றிருந்த அப்பகுதியைச் சோ்ந்த சோ்ந்த வேலு (51) மீது காா் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த வேலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த காடாம்புலியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று வேலுவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து உயிரிழந்த வேலுவின் மனைவி விமலாமணி அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் ஐய்யப்பன், நாராயணமூா்த்தி, தங்கதுரை, ஆறுமுகம், கவிமணி ஆகியோா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தொடா்ந்து, ஐய்யப்பன், நாராயணமூா்த்தி, தங்கதுரை ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள கவிமணி, ஆறுமுகத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.