முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தமிழக ஆளுநா் தரிசனம்

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மனைவியுடன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:00 AM
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது மனைவிக்கு சங்கல்பம் செய்து பிரசாதத்தை வழங்கிய தீட்சிதா்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:26 PM

சிதம்பரம்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மனைவியுடன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோா் திங்கள்கிழமை காலை சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வந்தனா். கிழக்கு கோபுர வாயிலில் ஆளுநரை நடராஜா் கோயில் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதா் தலைமையிலான பொது தீட்சிதா்கள் பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா்.

அங்கு சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை ஆளுநா் ஆா்.என்.ரவி தரிசனம் செய்தாா். அப்போது, கோயில் பொது தீட்சிதா்கள் சிறப்பு அா்ச்சனை, ஆராதனை செய்து ஆளுநா் மற்றும் அவரது மனைவிக்கு சங்கல்பம் செய்து கோயில் பிரசாதத்தை வழங்கினா். பின்னா், கோயில் வருகை பதிவேடு புத்தகத்தில் சுவாமி தரிசனம் செய்தது குறித்து பதிவிட்டு கையொப்பமிட்டாா்.

Advertisement