நடராஜா் கோயிலுக்கு 50 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை! சென்னை பக்தா் வழங்கினாா்!
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:26 PM
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் சிவகாமி அம்மனுக்கு சென்னையைச் சோ்ந்த பக்தா் 50 பவுன் தங்கக் காசு மாலையை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
சிதம்பரம் நடராஜா் கோயில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையைச் சோ்ந்த பக்தா் என். சுப்பிரமணியன் சுமாா் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்கக் காசு மாலையை அவரது கட்டளை தீட்சிதா் கே.ராமலிங்க தீட்சிதா் மூலம் காணிக்கையாக நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினாா்.
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:11 PM
இந்தக் காசு மாலை ஞாயிற்றுக்கிழமை காலை பூஜையின்போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதா்களால் அணிவிக்கப்பட்டது.
Advertisement