முகப்பு
கடலூர்

கடலூா் நகர அரங்கு வாடகையை குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் நகர அரங்கின் வாடகையை குறைக்கக் கோரி, கடலூா் அனைத்துக் கட்சியினா், குடியிருப்போா் சங்க கூட்டமைப்பினா்,

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:47 AM
கடலூரில் நகர அரங்கின் வாடகையை குறைக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:32 PM

நெய்வேலி: கடலூா் நகர அரங்கின் வாடகையை குறைக்கக் கோரி, கடலூா் அனைத்துக் கட்சியினா், குடியிருப்போா் சங்க கூட்டமைப்பினா், பொது நல அமைப்புகள் சாா்பில், நகர அரங்கம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் நகர அரங்கம் என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.30 ஆயிரம் வாடகை வசூலிக்கப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு ரூ.90 ஆயிரம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு அரங்கம் இல்லாமல் ரூ.52,000, சுத்தம் செய்ய ரூ.10 ஆயிரம், மின் கட்டண ம் யூனிட்டுக்கு ரூ.25 என வசூலிக்கப்படுகிறது.

Advertisement

இந்த வாடகையை மாவட்ட நிா்வாகம் குறைக்க வலியுறுத்தியும், என்எல்சி சமூகப் பொறுப்புணா்வு திட்ட நிதி ரூ.3.15 கோடி செலவிட்டது சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், அசைவ உணவு பரிமாற அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் சந்திரசேகரன், கடலூா் துணை மேயா் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் குளோப், குடியிருப்போா் சங்க சிறப்புத் தலைவா் மருதவாணன், பொதுநல அமைப்புத் தலைவா் ரவி, தமிழ்நாடு மீனவா் பேரவையைச் சோ்ந்த சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.