லட்சத்தீவில் ஆராய்ச்சி மாணவரால் கண்டறியப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் பெயா் சூட்டப்பட்ட புதிய வகை நண்டு. 
கடலூர்

லட்சத்தீவில் கண்டெடுக்கப்பட்ட புதிய நண்டுக்கு அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா் பெயா்

லட்சத்தீவில் கண்டறியப்பட்ட புதிய வகை நண்டுக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

Syndication

சிதம்பரம்: லட்சத்தீவில் கண்டறியப்பட்ட புதிய வகை நண்டுக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் அகத்தி தீவும் ஒன்றாகும். இத்தீவு பவளப் பாறைகளைக் கொண்டதாக இருப்பதுடன், பல்வேறு கடல் உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழிடமாகவும் செயல்படுகிறது.

இந்தத் தீவின் பவளப் பாறை சூழலிலிருந்து, சுமாா் 3 மி.மீ. அளவுள்ள புதிய நண்டு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். இந்த சிறிய நண்டு ’கலாத்தியா’ எனும் இனத்தைச் சாா்ந்தது. இவ்வினத்தைச் சோ்ந்த நண்டுகள் ‘ஸ்குவாட் லாப்ஸ்டா்’ என பொதுவாக அழைக்கப்படுகின்றன.

சிறிய லாப்ஸ்டா்களை போன்ற தோற்றமுடைய இவை, பவளப்பாறைகளுக்கு இடையில் வாழ்பவை. கரிமப் பொருள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பவளப் பாறை சூழலின் சமநிலையை பேணுவதிலும், மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களுக்கு உணவாக இருப்பதிலும், இந்நண்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த புதிய இனத்துக்கு, கடல் உயிரியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநரும், புல முதல்வருமான த.பாலசுப்ரமணியனனை கௌரவிக்கும் விதமாக, ‘கலாத்தியா பாலசுப்பிரமணி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு இந்திய வேளாண்மை ஆராய்சி கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வள பேணகம் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை அந்த நிறுவனத்தின் மண்டலத் தலைவா் தி.த.அஜித் குமாா் வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மாணவா் சுரேந்திரன் மேற்கொண்டாா்.

இதுகுறித்து தி.த.அஜீத்குமாா் கூறியதாவது: இந்த நண்டின் உடல் அமைப்புகளை ஆராய்ந்ததுடன், இந்திய - பசிபிக் பகுதியிலுள்ள அதன் நெருங்கிய தொடா்புடைய இனங்களுடன் ஒப்பிட்டு, டி.என்.ஏ பகுப்பாய்வின் மூலம் இந்த புதிய இனத்தை உறுதிப்படுத்தினா். இந்த ஆய்வு முடிவுகள் சா்வதேச விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டு, உலகளாவிய உயிரின வகைப்பாடு இதழான ‘ஜுடாக்சா’வில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக கண்டறியப்பட்ட இந்த நண்டு, லக்னோவில் உள்ள தேசிய மீன் மரபணு வள பேணகத்தால் பராமரிக்கப்படும் தேசிய நீரியல் உயிரினக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்! தந்தை, 3 குழந்தைகள் கொலை; கர்ப்பிணித் தாய் படுகாயம்!

சசிகுமார் படத்தை வெளியிடும் சூர்யா!

விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு நடந்தவற்றை மக்களிடம் தெரிவிப்பார்: செங்கோட்டையன்

சென்செக்ஸ் 40.28 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 18.70 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!

புதினா சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

SCROLL FOR NEXT