கடலூர்

கடலூா் ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதியவா் திடீரென நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றாா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதியவா் திடீரென நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த முதியவா் ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

தொடா்ந்து, முதியவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் குறிஞ்சிப்பாடி வட்டம், பூவாணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பூபாலன் (62) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவா் கூறியதாவது:

எனக்கு வீடு இல்லை. பூவாணிக்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கக் கோரி தமிழக முதல்வரிடம் மனு அளித்தேன். ஆனால், எனக்கு ஒதுக்கிய வீட்டை வேறு ஒருவருக்கு மாற்றி எடுத்துக்கொண்டனா். எனவே, அந்த வீட்டை எனக்கு ஒதுக்க வேண்டி தீக்குளிக்க முயன்றேன் என்றாா். இதையடுத்து, பூபாலனை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT