முகப்பு
கடலூர்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கடலூா் மாவட்டம், நல்லூா் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:03 AM
நல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:07 PM

கடலூா் மாவட்டம், நல்லூா் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நல்லூா் வட்டார மருத்துவ அலுவலா் தமிழரசன் தலைமை வகித்தாா். வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல் முன்னிலை வகித்தாா். விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், திமுக நல்லூா் வடக்கு ஒன்றியச் செயலா் பாவாடை கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, முகாமில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சேவைகள் மற்றும் சிகிச்சை முறைகளைச் சிறப்பு அழைப்பாளா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து,

பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

Advertisement

இம்முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சிறப்பு மருத்துவா்களால் வழங்கப்பட்டது.