முகப்பு
கடலூர்

ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:04 AM
கடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய குருக்கள்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 7:51 PM

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இந்தக் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனா். அதன்படி, கடந்த 8-ஆம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.

இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை 4-ஆம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னா், யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீா் கலசம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

இதையடுத்து, காலை 9.30 மணியளவில் குருக்கள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு ஸ்ரீநாகம்மனை தரிசனம் செய்தனா்.

இரவு 7 மணியளவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.