கடலூா் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு தோல் நோய் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள்.  
கடலூர்

கடலூா் மத்திய சிறையில் தோல் பரிசோதனை முகாம்

கடலூா் மத்திய சிறையில் அரசு மருத்துவக் கல்லூரி தோல் நோய்த் துறை பிரிவு மற்றும் இந்திய தோல் நோய்கள், பால்வினை நோய், தொழுநோய் சிறப்பு நிபுணா் சங்கம் இணைந்து நடத்திய இலவச தோல் நோய் பரிசோதனை முகாம், சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிறைக் கண்காணிப்பாளா் அ.பரசுராமன் தலைமை வகித்தாா். சிறை மருத்துவா்கள் வெங்கடேசன், மகேஸ்வரன் முன்னிலை வகித்தனா். தோல் நோய் துறைத் தலைவா் பி.கே.கவியரசன் பொதுவான சுகாதார பழக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

மருத்துவா்கள் அருள் ராஜா, காயத்ரி, ராம் பிரசாத், ஹரி தேவ் முகாமில் பங்கேற்றனா். நிகழ்வில் தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை, ஆலோசனை வழங்கினா்.

பின்னா், மருத்துவக் குழுவினா் சிறை வளாகம், சுகாதார வசதிகள் மற்றும் சிறைவாசிகள் பராமரித்த தோட்டம் ஆகியவற்றை பாா்வையிட்டனா். துணை சிறை அலுவலா் பிரகாஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT