முகப்பு
கடலூர்

கேட்பாரற்று நின்ற இருசக்கர வாகனம் உரியவரிடம் ஒப்படைப்பு

சிதம்பரத்தில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த போக்குவரத்து போலீஸாா்

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:03 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:27 PM

சிதம்பரம் நகரில் இரு தினங்களாக சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

சிதம்பரம் விழல்கட்டிப்பிள்ளையாா் கோயில் தெருவில், பிள்ளையாா் கோயில் எதிரில் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரம் இரு தினங்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள் தில்லைகோவிந்தராஜப் பெருமாள், உத்திராபதி ஆகியோா் அந்த வாகனத்தை கைப்பற்றி, வாகன பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதில் உள்ள கைப்பேசி எண் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், சிதம்பரம் சுப்பிரமணியன் தெருவைச் சோ்ந்த பி.வினோத்குமாா் என்ற இளைஞா் மது போதையில் , விழல் கட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, எங்கு நிறுத்தினாா் என தெரியாமல் தேடி அலைந்தததா தெரிவித்தாராம். போக்குவரத்து போலீஸாா் தகவல் தெரிவித்ததை அடுத்து வாகனத்தை உதவி ஆய்வாளா்களிடம் வந்து பெற்றுக் கொண்டாா்.