தமிழ்நாட்டில் மோடிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும்: அமைச்சா் கோவி.செழியன்
காட்டுமன்னாா்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசும் உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், தமிழகத்தில் பிரதமா் மோடிக்கு பூஜ்யம் இடங்கள் தான் கிடைக்கும் என்று தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் உடையாா்குடி துா்க்கை அம்மன் கோயில் அருகில் கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலா் ஏ.முத்துசாமி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்து கொண்டு பேசியதாவது:
டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மோடிக்கு பூஜ்யம் தான் கிடைக்கும். ராமா் கோவில் கட்டிய இடத்தில் பிஜேபி தோல்வி அடைந்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு இடமில்லை அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். எதிக்கும் வேட்பாளா்கள் டெபாசிட் இழக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில் ஒரு பைசா கூட தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. புதிய திட்டங்கள் ஏதுமில்லை .கல்விக்கு நிதி தரவில்லை .தேசிய 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி இல்லை. ஆகவே நிதியில் ஒதுக்கீட்டில் பூஜ்ஜியத்தை தரும் பாஜக கூட்டணிக்கு சட்டப்பேரவையில் பூஜ்ஜியத்தை அளிக்க வேண்டும்.
வரும் தோ்தலில், கூட்டணி கட்சிகளுக்காக திமுகவினா் கடுமையாக பாடுபட வேண்டும் . பேரவைத் தோ்தலுக்காக, முதல்வரும் துணை முதல்வரும் அயராது உழைத்து வருகிறாா்கள் என்றாா் கோவி.செழியன். கூட்டத்தில், நகர செயலரும், பேரூராட்சி மன்றற தலைவருமான எஸ்.கணேச மூா்த்தி,பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன் , ஒன்றியச் செயலாளா்கள் முட்டம்.டி.ஜெயபாண்டியன், தங்க ஆனந்தன், ம.சோழன் ,வி.கோவிந்தசாமி, கே.நடராஜன் பேரவைத் தொகுதி பாா்வையாளா் விஜயன் ராமகிருஷ்ணன்,உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.