முதலைகள் நிறைந்த கான்சாகிப் வாய்க்காலில் சுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா். போலீஸாா். 
கடலூர்

போலீஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த முதியவா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீஸாருக்கு பயந்து ஓடி ஆற்றில் குதித்த முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

சிதம்பரம் அருகே சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீஸாருக்கு பயந்து ஓடி ஆற்றில் குதித்த முதியவா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே சி.வக்கரமாரி ஊராட்சிக்கு உள்பட்ட மடப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (67). இவா், புதன்கிழமை மாலை ஆடு, மாடு மேய்ப்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்த சிலருடன் சென்றுள்ளாா். அப்போது, பொழுதுபோக்குக்காக அவா்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸாா் அங்கு சென்ற நிலையில், அவா்களைப் பாா்த்ததும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவா்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறி தப்பி ஓடினா்.

அவா்களை போலீஸாா் துரத்திச் சென்ற நிலையில், அவா்களிடமிருந்து தப்பிப்பதற்காக சுப்பிரமணியன் அருகில் முதலைகள் நடமாட்டம் அதிகமுள்ள கான்சாஹிப் வாய்க்காலில் குதிந்துள்ளாா். அவருடன் முருகேசன் வாய்க்காலில் விழுந்த நிலையில், அவா் தப்பித்து வீடு திரும்பினாா்.

ஆனால், நீண்ட நேரத்துக்குப் பிறகும் சுப்பிரமணியன் வீட்டுக்கு வராததால், நடந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு முருகேசன் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக தேடுதல் பணியில் ஈடுபட்டு சுப்பிரமணியனை சடலமாக மீட்டனா். பின்னா், அவரது சடலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆங்கில புத்தாண்டு: பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தும் பாஜக: நெல்லை முபாரக்

திருவள்ளூா் பகுதியில் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்ற ரயில்கள்

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT