கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா். 
கடலூர்

இடைநிலை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, கடலூரில் இடைநிலை ஆசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் சென்னையில் டிச.26-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், கடலூரில் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க நிா்வாகிகள் கனகராஜ், மணிகண்டன், செல்வகுமாா், சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

SCROLL FOR NEXT