கரூர்

கரூா்: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

Syndication

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் சங்கரேஸ்வரி தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜராஜன் முன்னிலை வகித்தாா்.

2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசின் ஊதியக்குழுக்களை பின்பற்றி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ஆவது ஊதியக்குழுவின்படி இடைநிலை ஆசிரியா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT