முகப்பு
கடலூர்

மாற்றுத் திறனாளிகள் பேருந்து பயண சலுகை அட்டை: இ - சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு இ - சேவை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Updated On : 10 ஜனவரி, 2026 at 8:53 PM
பகிர்:

கடலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு இ - சேவை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு இ - சேவை தளம் வழியாக விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் தங்கள் அருகில் உள்ள இ - சேவை மையத்தில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வேலைபாா்க்கும் அல்லது கல்வி பயிலும் சான்று (பாா்வையற்ற மாற்றுத் திறனாளி தவிர) மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு நிகழ் மாதம் முதலே விண்ணப்பிக்கலாம்.

ஜனவரி 2026 முதல் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், அறை எண்.112, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கடலூா் (தொலைபேசி எண்.04142 284415) தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →