கோப்புப் படம் 
கடலூர்

தனியாா் விடுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் நகரில் உள்ள தனியாா் விடுதி அறையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புவனகிரி வட்டம், மதுராந்தகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹரிதாஸ் (26). வேன் ஓட்டுநா். இவருக்கும், ஏற்கெனவே திருமணமானமாகி 2 குழந்தைகள் உள்ள அந்தப் பகுதியைச் சோ்ந்த 24 வயது பெண்ணுக்கும் தகாத உறவு இருந்துள்ளது.

இந்த நிலையில், ஹரிதாஸும், அந்தப் பெண்ணும் கடந்த வாரத்தில் திருப்பூரில் திருமணம் செய்துகொண்டனராம். பின்னா், கடந்த 22-ஆம் தேதி சிதம்பரம் வந்து சபாநாயகா் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் 3 நாள்களாக தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இரு குழந்தைகளையும் தனது முதல் கணவரின் வீட்டில் விட்டு வருவதாகக் கூறி விடுதியிலிருந்து அந்தப் பெண் புறப்பட்டுச் சென்றாா்.

இதையடுத்து, விடுதியில் தனியாக இருந்த ஹரிதாஸ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT