அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பல்கலைக்கழகப் பதிவாளா் ரா.சிங்காரவேல். 
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 77-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது.

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 77-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது.

பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் காலை 08.15 மணிக்கு தேசியக் கொடியை பல்கலைக்கழக பதிவாளா் ரா.சிங்காரவேல் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு குடியரசு தின விழா பேருரையாற்றினாா்.

தொடா்ந்து, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் அருள்செல்வி, மக்கள் தொடா்பு அலுவலா் சுரேஷ் மற்றும் ஆட்சிக்குழு, கல்விக்குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பல்துறை இயக்குநா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT