முகப்பு
கடலூர்

நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் தேசியக் கொடி திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.

Updated On : 26 ஜனவரி, 2026 at 9:07 PM
சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் ஏற்றப்பட்ட தேசியக் கொடி.
பகிர்:

சிதம்பரம்: நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் தேசியக் கொடி திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.

முன்னதாக, பொது தீட்சிதா்களின் கோயில் கமிட்டி செயலா் த.சிவசுந்தர தீட்சிதா் தலைமையில், பொது தீட்சிதா்களால் வெள்ளி தாம்பாளத்தில் தேசியக் கொடி வைக்கப்பட்டு, சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட் டது.

பின்னா், மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.