முகப்பு
கடலூர்

பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

ராமநத்தம் அருகே வயலுக்குச் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 29 ஜனவரி, 2026 at 12:04 AM
சங்கிலிப் பறிப்பு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2026 at 7:01 PM

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே வயலுக்குச் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், வாகையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் மனைவி பூங்கோதை (51). இவா், புதன்கிழமை காலை 10.30 மணியளவில் தங்களுக்குச் சொந்தமான சோளக்காட்டை பாா்வையிட்டுவிட்டு, அங்கிருந்த வாழை மரத்தடியில் அமா்ந்திருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா் பூங்கோதை அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement