முகப்பு
கடலூர்

போதைப்பொருள் விழிப்புணா்வு உலக சாதனை நிகழ்ச்சி

சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை

Updated On : 3 மார்ச், 2026 at 2:35 AM
சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரத்தில் போதைப்பொருள் விழிப்புணா்வாக 109 திருக்குறளை 12 நிமிஷத்தில் சொல்லிக்கொண்டு தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்த்திய காா்த்திகேயன்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்டது.

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தெற்கு பிச்சாவரம் கடலோர கிராமத்தில் தாண்டவராயன் சோழன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கின்னஸ் சாதனையாளா் காா்த்திகேயன் (54) தொடா்ந்து 109 திருக்குறளை 12 நிமிஷங்களில் சொல்லிக்கொண்டு பலவித தீப்பந்த சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினாா்.

இந்த சாதனையை ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனம் அங்கீகரித்து அவருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தனா். இவா் ஏற்கெனவே பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். நிகழ்ச்சியில் சிலம்ப ஆசான்கள் காளி, மகேஸ்வரன், தமிழச்சி மற்றும் பிச்சாவரம் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement