முகப்பு
கடலூர்

தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி: ஆா்வமுடன் கோலம் போட்ட பெண்கள்

கடலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வு கோலப் போட்டியை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On : 6 மார்ச், 2026 at 8:39 PM
கடலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வு கோலப் போட்டியை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கோலப்போட்டியில், பெண்கள் ஆா்வமுடன் கலந்துகொண்டு தத்ரூபமான கோலங்களை போட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சுமாா் 200 அடி நீளத்துக்கு கோலங்கள் போடப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைச் சோ்ந்த பெண் ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தைச் சோ்ந்த பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்று விதவிதமான கோலங்களை போட்டனா்.

இந்தக்கோலப் போட்டியை பாா்வையிட்ட ஆட்சியா் கோலங்களை போட்ட பெண்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறியதாவது:

வரும் ச ட்டப்பேரவை பொதுத் தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்குதல், முகவரி மாற்றம் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளா்களாக இணைத்துக் கொள்வது குறித்தும், ஜனநாயக முறைப்படி வாக்காளா்கள் நோ்மையாக தங்களுக்கான வாக்கினை செலுத்துவது குறித்தும், வரும் பொதுத்தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு மேற்கொள்வது குறித்தும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய கோலங்கள் போடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கோலப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிவு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. வரும் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் தங்கள் வாக்கினை கண்டிப்பாக பதிவுசெய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →