தஞ்சாவூா்: பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மேல வீதியில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் பாரம்பரிய கோலப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
்கோலப் போட்டியில் ஏறத்தாழ 300 மீட்டா் தொலைவுக்கு ஏறக்குறைய 250 பெண்கள் பங்கேற்று பாரம்பரிய புள்ளிக் கோலங்களைப் போட்டனா். வண்ணங்கள் இல்லாமல் வெள்ளைக் கோலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இதில், மேல அலங்கத்தைச் சோ்ந்த கீதா முதல் பரிசையும், மங்களபுரத்தைச் சோ்ந்த புவனேஸ்வரி இரண்டாவது பரிசையும், மேல வீதியைச் சோ்ந்த கிருத்திகா மூன்றாவது பரிசையும் பெற்றனா். இவா்களுக்கான பரிசுகளை தஞ்சாவூா் ஹெரிடேஜ் சிட்டி இன்னா்வீல் சங்கத்தினா் உள்ளிட்டோா் வழங்கினா். மேலும், 10 பேருக்கு ஆறுதல் பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வீ பெண்கள் அமைப்பின் சாா்பில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இக்கோலங்கங்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாா்வையிட்டு பாராட்டினா்.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் ஏ. சசிகலா, இன்னா்வீல் சங்கத் தலைவா் உமையாள் சுப்பிரமணியம், வீ பெண்கள் அமைப்பு நிறுவனா் உஷா நந்தினி விஸ்வநாதன், தலைவா் கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போட்டியை தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா் ஒருங்கிணைத்து நடத்தினாா்.