முகப்பு
கடலூர்

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம்,சிறுபாக்கம் அருகே மது போதையில் தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:00 PM
பலி
பகிர்:

கடலூா் மாவட்டம்,சிறுபாக்கம் அருகே மது போதையில் தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், எஸ்.புதூா் பகுதியில் வசித்து வந்தவா் சின்னசாமி(51). இவா், கடந்த 5-ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம். அதனை, மனைவி சுமதி கண்டித்தாராம். இதனால் மனவருத்தமடைந்த சின்னசாமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீயிட்டுக் கொண்டாா். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினா்கள் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →