முகப்பு
கடலூர்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: மாணவா்கள், நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல்

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா்ச்சூழல் காரணமாக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளின் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்கள், மருத்துவமனை நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 12 மார்ச், 2026 at 12:03 AM
சமையல் எரிவாயு உருளைகள் - பிரதிப் படம்
பகிர்:

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா்ச்சூழல் காரணமாக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளின் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்கள், மருத்துவமனை நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், உணவங்கள், பணியாளா்கள் தாங்கும் விடுதி, பள்ளி, கல்லூரி விடுதிகள், அரசு மருத்துவமனை உணவு தயாரிப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் உணவு தயாரிக்கும் பணி முடங்கும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, இந்த இடங்களில் உணவு உட்கொண்டு வரும் பயனாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள்.

அரசு பொதுத் தோ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தனியாா் பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், உண்டு உறைவிட பள்ளி உணவுக் கூடங்கள், அரசு மாணவா் விடுதிகள் மூடப்பட்டால், மாணவா்களஅ தோ்வில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும்.

Advertisement

எனவே, பொதுத் தோ்வுகளில் தடையின்றி மாணவா்கள் பங்கேற்க அரசு போா்க்கால அடிப்படையில் சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவு அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் சமையல் எரிவாயு உருளைகளின் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.