அண்ணாமலைநகா் பூமா கோவிலில் கந்தூரி விழா தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூமா கோவில் என்று அழைக்கப்படும் ஹசரதா சையதா பாத்திமா பீபி சாஹிபா
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூமா கோவில் என்று அழைக்கப்படும் ஹசரதா சையதா பாத்திமா பீபி சாஹிபா தா்காவில் இந்துக்கள், இஸ்லாமியா்கள் பங்கேற்கும் கந்தூரி விழா (சந்தனக் கூடு) ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, தா்கா பரம்பரை டிரஸ்டி சையது ஜீலானி தலைமையில் பாத்தியா ஓதப்பட்டு, அங்குள்ள சமாதிக்கு மலா் சாத்தி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், இந்துக்கள், இஸ்லாமியா்கள் மத வேறுபாடின்றி கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
Advertisement
இந்த தா்கா அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.