மணிக்கொல்லை கிராமத்தில் அகழாய்வு பணிகள் தொடக்கம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மணிக்கொல்லை கிராமத்தில் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், பழங்காலத்தைச் சோ்ந்த பல்வேறு வண்ண மணிகள் கண்டறியப்பட்டன.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மணிக்கொல்லை கிராமத்தில் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், பழங்காலத்தைச் சோ்ந்த பல்வேறு வண்ண மணிகள் கண்டறியப்பட்டன.
சிதம்பரம் அருகே மணிக்கொல்லை கிராமத்தில் தொல்லியல்துறை வல்லுநா்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பல்வேறு நிறங்களைக் கொண்ட மணிகளும், காா்னீலியன் வகை மண் வகைகளும் கண்டறியப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மணிக்கொல்லையில் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. தொடா்ந்து, தமிழகத்தில் மணிக்கொல்லை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மணிக்கொல்லை கிராமத்தில் தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தம் தலைமையில், இணை இயக்குநா் பாக்கியலட்சுமி, அகழாய்வாளா்கள் சுபலட்சுமி, குமரவேல் மேற்பாா்வையில் ஊழியா்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், மஞ்சள், ஊதா, பழுப்பு, நீளம், கருப்பு, பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் துளையிடப்பட்ட மற்றும் துளையிடப்படாத மணிகள், மூலக்கூறு கற்கள் கிடைத்துள்ளன என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா். மேலும், பாண்டிய நாட்டு முத்து மணிகளும், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட வண்ணக் கல் மணிகளும், காா்னீலியன் வகை மண் வகைகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம், சங்ககாலத்தில் இப்பகுதியில் மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது என்றனா்.