கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்டத் தோ்தல் அலுவலா்
கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு உறுதி செய்யும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதிதியா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.அப்போது, அவா் கூறியதாவது:
பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது.
வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையைவிட கூடுதலாக இருப்பிற்காக 20 சதவீதமும், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி தேவையை விட கூடுதலாக இருப்பிற்காக 30 சதவீதமும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கும் 3,108 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3,367வாக்குப்பதிவு உறுதி செய்யும் கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தொகுதிவாரியாக....
அதன்படி, திட்டக்குடி தொகுதியில் உள்ள 279 வாக்குச்சாவடி மையங்களுக்கு 335 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 335 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 363 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும். விருத்தாசலம் தொகுதியில் உள்ள 317 வாக்குச்சாவடி மையங்களுக்கு 380 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 380 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 412 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும். நெய்வேலி தொகுதியில் உள்ள 256 வாக்குச்சாவடி மையங்களுக்கு 307 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 307 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 333 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும்.
பண்ருட்டி தொகுதியில் உள்ள 309 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 371 மின்னணு வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள், 371 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 402 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும். கடலூா் தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 310 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 335 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள 278 வாக்குச்சாவடி மையங்களுக்கு 334 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 334 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 361 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும். புவனகிரி தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 365 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 365 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 395 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும்.
சிதம்பரம் தொகுதியில் உள்ள 298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 358 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 358 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 387 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களும். காட்டுமன்னாா்கோயில் தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 349 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 378 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 2590 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான 3108 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3108 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3367 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கணினி முறையில் தோ்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இப்பணி, நிறைவுற்றதையடுத்து அந்தந்த தொகுதிக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்த்து உரிய பாதுகாப்புடன் தலைமையிடத்திலிருந்து எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதை தொடா்ந்து இரண்டாம் கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்ற பின்னா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடா்பான அனைத்து பணிகளும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் என தெரிவித்தாா்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) திருநாவுக்கரசு, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனா்.