காட்டுமன்னாா்கோவில் அருகே ரூ.1. 70 லட்சம் பறிமுதல்
27சிஎம்பி4: படவிளக்கம்- காட்டுமன்னாா்கோவில் அருகே நாச்சியாா்பேட்டையில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.1.70 லட்சத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஓப்படைத்த பறக்கும் படையினா்
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் தோ்தல் ஆணைய பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.1.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலை ஒட்டி பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து குமாரக்குடி செல்லும் சாலையில் நாச்சியாா் பேட்டை என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது மினிடெம்போ வாகனத்தில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சோ்ந்த யுவராஜ் என்பவரிடமிருந்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனா். அந்தப்பணம் காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.