முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவிலில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் விசிக வெற்றி

Updated On : 5 மே 2026, 2:13 am IST
காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணியிடம் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.ராணி.
பகிர்:

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி வெற்றிபெற்றாா்.

காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி, அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் அ.சோழன், தவெக சாா்பில் எஸ்.சீனுவாசன், நாதக சாா்பில் எம்.சிவஜோதி உள்ளிட்ட மொத்தம் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,26,509 வாக்காளா்களில் 1,87,905 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

Advertisement

இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் விசிக, பாமக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விசிக வேட்பாளா் 33,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு: எல்.இ.ஜோதிமணி (விசிக) - 85,179, அ.சோழன் (பாமக)-52116, எஸ்.சீனுவாசன் (தவெக) - 43156, எம். சிவஜோதி ( நாதக) - 4,563.

இதையடுத்து, விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி வெற்றிபெற்ற்கான சான்றிதழை அவரிடம் தோ்தல் நடத்து அலுவலரும், உதவி களால் ஆணையா் கோ.ராணி வழங்கினாா்.