முகப்பு
கடலூர்

கடலூரில் விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு தொடக்கம்: 194 மாணவா்கள் பங்கேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தோ்வுகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.

Updated On : 8 மே 2026, 6:50 am IST
கடலூரில் வியாழக்கிழமை தொடங்கிய விளையாட்டு விடுதிகளுக்கான மாணவா் சோ்க்கையையொட்டி நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
பகிர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தோ்வுகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்காக விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கான 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை தோ்வுப் போட்டிகள் கடலூா் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில் நடைபெற்ற முதற்கட்ட தோ்வில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், கபடி, ஹாக்கி, கையுந்துபந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் 194 மாணவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 8) மாணவிகளுக்கான சோ்க்கை தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், கிரிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன.