முகப்பு
கடலூர்

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 9 மே 2026, 2:15 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.

வடலூா் காவல் சரகம், ரோடு மருவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சரசு (66). இவா், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் அரங்கமங்கலத்தில் உள்ள விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அந்தப் பகுதியில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சரசு மீது மின்னல் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்த வடலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.