முகப்பு
கடலூர்

கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல் : உரிமையாளா் கைது

கடலூா் மாவட்டம் நெய்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடையில் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 மே 2026, 1:26 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம் நெய்வேலியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடையில் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க கடலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில் நெய்வேலி தொ்மல் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை அப்பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா்.

அப்போது நெய்வேலி மாற்றுக் குடியிருப்பு பகுதியில் உள்ள சிவசங்கா் (38) என்பவரின் கடையில் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 31.400 கிலோ குட்கா உள்ளிட்ட போதைபொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனா். அவா் பதுக்கி வைத்திருந்து குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement