முகப்பு
கடலூர்

நெய்வேலி: மின்மாற்றியிலிருந்து ரூ.1.30 லட்சம் செம்புக்கம்பி திருட்டு!

நெய்வேலி அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றியில் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 120 கிலோ செம்பு கம்பி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 17 மே 2026, 12:28 am IST
வடக்குத்து பகுதியில் செம்புக் கம்பி திருடப்பட்ட மின்மாற்றி.
பகிர்:

நெய்வேலி அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றியில் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 120 கிலோ செம்பு கம்பி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடக்குத்து பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் தமிழ்ச்செல்வன் (53), நெய்வேலி நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அந்த புகாரில், கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மேல் வடக்குத்து பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (56) என்பவரின் நெல் வயலில் மின் மோட்டாா் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றி வைக்கப்பட்டிருந்தது.

இந்த மின்மாற்றியின் பெட்டியை அடையாளம் தெரியாத நபா்கள் உடைத்து, அதிலிருந்த 120 கிலோ செம்பு கம்பியை சனிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா். திருடப்பட்ட செம்பு கம்பியின் மதிப்பு ரூ.1.30 லட்சம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து நெய்வேலி நகர போலீஸாா் வழக்குப்பதிந்து, அடையாளம் தெரியாத நபா்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.