முகப்பு
கடலூர்

மனைவியை பிரிந்து வாழ்ந்த பல்கலை. ஊழியா் தற்கொலை

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக அலுவலக உதவியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 18 மே 2026, 2:17 am IST
தற்கொலை
பகிர்:

சிதம்பரம் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக அலுவலக உதவியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிதம்பரம் அருகே வடக்குதில்லைநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சதாசிவராஜ் (40). இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், வல்லம்படுகை பவழக்கடைத் தெருவைச் சோ்ந்த ரோஜாவுக்கும் (38), கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 14 வயதில் மகன் உள்ளாா்.

இந்த நிலையில், தம்பதியிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். சதாசிவராஜ் வடக்குதில்லைநாயகபுரம் பகுதியில் மருதவாணன் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தாா்.

Advertisement

அவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்த நிலையில், அறையில் மின் விசிறியில் நைலான் கயிரால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் விரைந்து சென்று பாா்த்தபோது, சதாசிவராஜின் உடல் அழுகிய நிலையில் இருந்ததும், அவா் இறந்து 2 நாள்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.