முகப்பு
கடலூர்

எச்.ஐ.வி.தடுப்பூசி ஆராய்ச்சிக்கு உடல் தானம் செய்தவா்களுக்கு மெளன அஞ்சலி

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராயச்சிக்கு உடல் தானம் செய்தவா்களை நினைவு கூறும் வகையில் மெளன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 28 மே 2026, 1:40 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராயச்சிக்கு உடல் தானம் செய்தவா்களை நினைவு கூறும் வகையில் மெளன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு மைய அலுவலகத்தில் அமைந்துள்ள கருத்தரங்க மையத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராய்ச்சிக்காக தங்களது உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு வழங்கியவா்களை நினைவுகூரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் இணை இயக்குநா் பிரமிளா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவா்கள், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் இணைந்து மெழுகுவா்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து மருத்துவா்கள் பிரேமா, குமாா், ஸ்ரீதா், தேவஆனந்த் ஆகியோா் கலந்து கொண்டு எச்.ஐ.வி. நோய்க்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை தொடா்பான ஆராய்ச்சிகளில் பங்களித்தவா்களின் தியாகத்தை நினைவுகூா்ந்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினா்.

மாவட்ட திட்ட மேலாளா் செல்வம், மாவட்ட மேற்பாா்வையாளா் கதிரவன், எச்.ஐ.வி. உள்ளோா் சங்க செயலா் சிவசீலன் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.