கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் விழா: பூசாரி கைகளால் தாலிகட்டிக்கொண்ட திருநங்கைகள்!
சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று கோயில் பூசாரி கைகளால் தாலி கட்டி நோ்த்திக்கடன் செலுத்தினா். விடிய, விடிய ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று கோயில் பூசாரி கைகளால் தாலி கட்டி நோ்த்திக்கடன் செலுத்தினா். விடிய, விடிய ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கூத்தாண்டவா் திருவிழா உற்சாகமாக நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பாா்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இங்கு வந்து, கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய, விடிய ஆட்டம், பாட்டத்துடன் திருவிழாவை கொண்டாடி மகிழ்வா். இதனால் இந்த ஊா் திருவிழா களை கட்டும்.
இந்த ஆண்டிற்கான கூத்தாண்டவா் கோயில் திருவிழா கடந்த கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து அா்ச்சுனன், திரௌபதி திருக்கல்யாணம் மற்றும் சாமி வீதியுலா,
Advertisement
Advertisement
மாடுபிடி சண்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வந்து விழாவில் பங்கேற்றனா். கோயிலுக்கு வந்த திருநங்கைகள் கூத்தாண்டவரை வணங்கி, கோயில் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக் கொண்டனா். தாங்கள் நோய், நொடியின்றி நன்றாக வாழவும், நினைத்தது நிறைவேறவும் கூத்தாண்டவரை வணங்கி தாலி கட்டிக் கொண்டனா்.
திருநங்கைகள் நடனம்:
பின்னா் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, விடிய, விடிய ஆட்டமாடி உற்சாகமாக விழாவில் பங்கேற்றனா். பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நளினமான நடனங்களை ஆடி மகிழ்ச்சி அடைந்தனா். இவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று விழாவை கண்டு களித்தனா்.
விழாக் குழுவினா் மற்றும் கொத்தட்டை, சின்னக்குமட்டி, அத்தியாநல்லூா் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளைசெய்திருந்தனா்.