கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருவருக்கு கரோனா உறுதி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவா்களில் பலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பியவா்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேரை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனா். இவா்களின் ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவா்களில் சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும், எலவனாசூா்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரும் 108 அவரச ஊா்தி மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT