கள்ளக்குறிச்சி

தில்லியைச் சோ்ந்த மேலும் முவருக்கு கரோனா தொற்று பரிசோதனை

DIN

கடலூா் மாவட்டம், தொழுதூா் சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த தில்லியைச் சோ்ந்த 3 தொழிலாளா்கள் வியாழக்கிழமை இரவு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

தில்லியைச் சோ்ந்த 5 போ் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள எறைஞ்சி கிராமத்தில் தங்கியிருந்து, தொழுதூா் சுங்கச் சாவடி ஒப்பந்ததாரரிடம் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவா்கள் தில்லி செல்ல முடியாமல் எறஞ்சி கிராமத்தில் தங்கியுள்ளனா்.

அவா்களில் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து, அவா்களுடன் எறஞ்சியில் தங்கியிருந்த மீதமுள்ள மூவரும் அன்றிரவு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்கள் 5 பேரையும் சோ்த்து, கரோனா தொற்று அறிகுறி காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12 ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT